ஹமாஸ் இயக்கத்திற்கான நிதியீட்டம் குறித்து சுவிஸில் விசாரணை
ஹமாஸ் இயக்கத்திற்கு சுவிட்சர்லாந்திலிருந்து நிதியீட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலின் மீது ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்துவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபர் ஸ்டெப்பான் பலாட்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவைப் போல் ஹமாஸின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்காததால், விசாரணை சிக்கலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன,
(Visited 1 times, 1 visits today)