வேலையை விடுவதற்கான நேரத்தை காட்டும் அறிகுறிகள்
வேலையை விடுவது என்பது எப்போதும் எளிதான ஒரு முடிவாக இருப்பதில்லை. ஆனால், நீங்கள் வேறு வேலையைப் பார்க்கத் தொடங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் சில தெளிவான அறிகுறிகள் உள்ளன. விளக்குகிறார் அகிலா ரங்கண்ணா
நீங்கள் வளர்ச்சியடையவில்லையா?
“என்னுடைய கடந்த வேலையில் நான் ஏழு ஆண்டுகளாக வேலை செய்து வந்தேன்,” என்கிறார் மேக்னா பதக், என்கிற டெக்கி “மேலும் கடந்த நான்கு வருடங்களில் எதுவுமே மாறவில்லை, அதே பொறுப்புகள், அதே வேலைகள் என்று முற்றிலும் தேங்கிப்போய்விட்டேன். வேலையை விடும் அளவுக்கு கூட சிந்திக்க முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டிருந்தேன், கடைசியாக வேலையை விட்டு, புதிய வேலையைத் தேடத் தொடங்கினேன்.”
நீண்டகாலம் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு, நீங்கள் பதவி உயர்வு, பொறுப்புகள் அதிகரிப்பு என்று எதுவும் இல்லாமல் இருந்தால், அது அயற்சியை ஏற்படுத்தும். ஒரு நல்ல நிறுவனத்தின் அடையாளம், அனுபவத்தை அங்கீகரித்து, திறமையை அடையாளம் கண்டு, வளர்ச்சியை ஊக்குவிப்பதே.
அப்படி நடக்காவிட்டால், நீங்கள் தேங்கி விட்டதாக உணர்ந்தால், புதிய வேலையைத் தேடுவதற்கான நேரம் வந்து விட்டது என்று பொருள்.