திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் உள்ள கண்டல்காடு – சாவாறு பகுதியில் வெள்ள நீரின் அடியோட்டத்தால் உருவான குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்போர் அந்தப் பகுதிக்குச் சென்றபோது சந்தேகத்துக்கிடமான பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தகவல் தரப்பட்டதின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
MILS 36 வகை கைக்குண்டுகள் – 109, T56 வகை துப்பாக்கி ரவைகள் – 1,678 ஆகிய ஆயுதங்கள் வெளிப்பட்டுள்ளன.
சம்பவ இடத்துக்குச் சென்ற கிண்ணியா பொலிஸார், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரை (STF) அழைத்து, மீட்கப்பட்ட அனைத்து கைக்குண்டுகளையும் செயலிழக்கச் செய்தனர்.
“வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்தால் ஏற்பட்ட பெரிய குழியில் இருந்து இந்த ஆயுதங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கண்டல்காடு – சாவாறு பிரதேசம் முன்போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவை அந்த காலத்தில் புதைக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.” என கிண்ணியா பொலிஸ் பொறுப்பு அதிகாரி, பொலிஸ் பரிசோதகர் N. G. K. பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை