வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை!
நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) எழுத்து மூலம் திணைக்களத்திற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் அரசாங்க அச்சக அலுவலகம் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இது தொடர்பான கோரிக்கை தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





