யுரேனியம் அடங்கிய வெடிகுண்டுகளை வழங்கும் திட்டம் இல்லை – பிரித்தானியா!
உக்ரைனுக்கு யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகளை வழங்குவதற்கான திட்டம் இல்லை என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு குறைந்த யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகளை இங்கிலாந்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானத்தை தொடர்ந்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் அணுவாயுத மோதலை உருவாக்கலாம் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் சேர்கைய் சொய்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களில் இலகுவாக ஊடுறுவும், திறமைக் கொண்ட யுரேனியம் கலந்த வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்க ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)