செய்தி வட அமெரிக்கா

முடிசூட்டு விழா: வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நெருங்கிவரும் நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சார்லஸ் மன்னரின் முடிச்சுட்டு விழாவானது எதிர்வரும் மே மாதம் முன்னெடுக்க இருப்பதாக பிரித்தானிய ராஜ குடும்பம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறித்த விழாவில் பங்கேற்பது சந்தேகமே என வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை உலகம் முழுவதும் உள்ள தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புகளை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் ஜோ பைடன் இடம்பெற்றிருக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், உத்தியோகப்பூர்வமாக அவர் இன்னும் அழைக்கப்படவில்லை.

Prince

இந்த நிலையில் தான், குறித்த விழாவிற்கு அவர் பங்கேற்பது சந்தேகம் என குறிப்பிட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக பிரதிநிதி ஒருவரை வெள்ளைமாளிகை அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 1953ல் எலிசபெத் ராணியாரின் முடிசூட்டு விழாவிற்கும் அப்போதைய அமெரிக்க ஜானாதிபதி பங்கேற்கவில்லை என்றே கூறப்படுகிறது. பதிலுக்கு நான்கு பேர்கள் கொண்ட குழு ஒன்று ராணியாரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, வாஷிங்டனில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களின் பட்டியல் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.ஏப்ரல் இறுதி வாரத்தில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் அயர்லாந்துக்கு செல்ல இருப்பதாகவும், புனித வெள்ளி தொடர்பான 25வது ஆண்டு விழாவினை சிறப்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!