Site icon Tamil News

மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் AI – எச்சரிக்கும் தொழில்நுட்பத்தின் தலைவர்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வருந்துகிறேன் என AI தொழில்நுட்பத்தின் கோட்பாதர் என போற்றப்படும் ஜெப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார்.

இது எதிர்காலத்தில் மனித மூளையை மிஞ்சி அதிசக்தியுடன் மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் சாட்பாட்டுகளை மேம்படுத்துவதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு செயல்படுகின்றன.

மைக்ரோசாப்ட் உருவாக்கிய சாட்ஜிபிடி, பிங்க் போன்ற சாட்பாட்களை மிஞ்சும் அளவுக்கு கூகுளும் சாட்பாட்டை உருவாக்கி வருகிறது. இந்த சாட்பாட்கள் மனிதனை போலவே சிந்தித்து பதில் தரக்கூடியவை.

எந்த கட்டுரையையும் நிமிடத்தில் எழுதி தரும், கம்ப்யூட்டர் கோடிங்கை எழுதும், தொழில் நிறுவனங்களின் அறிக்கைகளை நிமிடத்தில் தயார் செய்து தந்திடும்.

இந்த தொழில்நுட்பம் வளர வளர பலரது வேலைவாய்ப்புகள் காலியாகி விடும் என ஏற்கனவே பலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பிதாமகனாக கருதப்படும் ஜெப்ரி ஹின்டன் (வயது 75) அளித்த பேட்டி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version