மர்மமான முறையில் இறக்கும் மயில்கள்
																																		மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள பூலாங்குளம் வயல் வெளியில் கடந்த ஞாயிற்று கிழமை 25 க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த 18 மயில்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு வயலின் அருகே கிடந்தநெல்மணியில் எடுத்து விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று மயில்கள் இறந்த பகுதிக்கு சென்ற வனத்துறையிர் தேடுதல் வேட்டையில்
இன்று 15க்கும் மேற்பட்ட மயில்கள் கைப்பற்றி உள்ளனர். மொத்தமாக கடந்த மூன்று நாட்களில் 35க்கும் மேற்பட்ட மயில்கள் கைப்பற்றப்பட்டதாகவும்,
விவசாயில் யாரேனும் தனது நிலத்தை பாதுகாக்க நெல்லில் விஷம் வைக்கப்பட்டதா என் விசாரிப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
        



                        
                            
