மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு!
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை (06) ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன் தொடர்புகொள்ள முடியவில்லை பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன் எனஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





