Site icon Tamil News

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு செல்வி தலைமையில் நடைபெற்றது இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில்  மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு  அரசுக்கு அறிக்கை  அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இன்று மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்,

என்னென்ன கருவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அரசு நிதியிலிருந்து என்னென்ன பெற முடியுமோ அதை பெற்று மக்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு செய்ய முடியாத திட்டங்களை மாவட்டத்தில் பல்வேறு செல்வாக்கு உள்ள நபர்களை சந்தித்து அவர்கள் மூலமாக நிதி பெற்று  மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழக அரசு ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான் நினைக்கிறோம், ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள்  தமிழகத்திற்கும் பொருந்தும், பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட உள்ளது அப்பொழுது முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது..

Exit mobile version