பைக்கை காதலித்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் பிரபாகரன். தாய் தந்தையை இழந்த இவர் தனி மரமாக வாழ்ந்து வருகின்றார். பியூட்டிஷியன் பியூட்டியசனாக வேலை செய்யும் இவர் மேன்சன் ஒன்றில் தங்கியிருக்கின்றார்.
பைக் மீது அலாதி பிரியம் கொண்ட பிரபாகரன், விலை உயர்ந்த உயர்ரக பைக் வாங்கும் கனவுடன் கடந்த ஐந்து வருடங்களாக சிறுக சிறுக பணம் சேமித்திருக்கின்றார்.
இந்த நிலையில் ஒரே தவனையாக 2.17 லட்சம் ரூபாய் பணத்தை தந்து YAMAHA R15 மாடல் பைக்கை வாங்கியிருக்கின்றார். TN 37 DB 6977 என்ற எண்ணுடன் வாகனம் வாங்கியிருக்கின்றார்.
இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய இந்த வாகனத்தை பணிக்கு செல்ல பயன்படுத்திய நிலையிலே, பணி முடிந்து இரவு பிரபாகரன் தங்கியிருக்கின்ற மேன்சன் முன் நிறுத்தியிருக்கின்றார். காலை வந்து பார்த்தபோது அதிர்ந்திருக்கின்றார் .
வாகனம் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலிஸில் புகார் தந்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலிஸார் சி சி டி வி காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
பைக்கை நள்ளிரவில் நோட்டமிட்டு வந்த பைக் கொள்ளையர்கள், யாரும் வருகின்றார்களா என சுற்றிலும் பார்த்து லாவகமாக திருடுகின்றனர். பைக்கின் லாக்கை இருவர் உடைத்து சாவி இல்லாமல் வண்டியை நகர்த்துகின்றனர்.
பின்னர் வண்டி ஒயரை கட் செய்து ஸ்டார்டு செய்து வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இரண்டு மர்ம நபர்கள் விலை உயர்ந்த பைக்கை லாவகமாக திருடிச்செல்லுகின்ற காட்சிகள் அந்த சி சி டி வி பதிவில் காண முடிகின்றது.
இதனை வைத்து போலிஸார் பைக்கை கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை தேடி வலைவீசி தேடிவருகின்றனர்.