ஐரோப்பா செய்தி

புட்டினுக்கு கைது உத்தரவு – உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரமாக்கும் ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய உத்தரவிட்டதனையடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரமாக்கி உள்ளது.

டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போரானது ஓரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.

உக்ரைனில் இருக்கும் குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தியதாக கூறப்படும் போர் குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கும் முடிவுக்கு பின்னரும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 16 ரஷ்ய டிரோன்கள், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் மேற்கு லிவிவ் மாகாணங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் 16 டிரோன்களில் 11 டிரோன்கள் மேற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி