செய்தி வட அமெரிக்கா

பிரிட்டன் மன்னர் சார்லஸின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து செல்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பைடன்

பிரிட்டன் மன்னர் சார்லஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இங்கிலாந்துக்கு அரசுமுறைப் பயணமாக அழைத்ததாகவும், அமெரிக்க ஜனாதிபதி பைடென் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று பைடனுக்கும் சார்லஸுக்கும் இடையிலான உரையாடலின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் எதிர்வரும் மே மாதம் பிரிட்டன் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக, அமெரிக்க அதிபர்கள் பிரிட்டிஷ் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. எனினும் இம்முறை ஜனாதிபதி பைடன் கலந்துகொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.

எனினும் விஜயம் எப்போது நடைபெறும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், ஆனால் அது எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்படும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!