தமிழ்நாடு

பிரபல ரவுடி வினோத் வெட்டிக் கொலை

போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து வெட்டியது. இதில் அந்த வாலிபர் உயிருக்குப் பயந்து அருகில் இருந்த வீட்டிற்க்குள் நுழைந்தார்.

விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் கதவை உடைத்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டவர் மாங்காடு அடுத்த பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்த வினோத்(27), என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது மேலும் அவரது தாயை அழைத்து வந்து அடையாளம் கானப்பட்டதில் கொலை செய்யப்பட்ட நபர் ரவுடி வினோத் என உறுதியானது.

இது குறித்து போலீசார் கூறுகையில் கொலை செய்யப்பட்ட ரவுடி வினோத்தின் தாய் அய்யப்பன்தாங்கலில் இருப்பதால் அவரை பார்ப்பதற்காக வினோத் வந்துள்ளார். அப்போது வழிமறித்து கொலை செய்துள்ளனர் வினோத் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு.

முன்பு செல்போன் திருடியதில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வினோத்தின் தம்பியை மாங்காட்டில் வைத்து இவருக்கு எதிர்கோஷ்டியான அஜித் தரப்பினர் தலைவர் வெட்டி படுகொலை செய்தனர். இந்த நிலையில் தம்பியின் கொலைக்கு பழி வாங்குவதற்காக கடந்த ஆண்டு நாட்டு.

வெடிகுண்டுகளை மோட்டார் சைக்கிள் வைத்து எடுத்து சென்றபோது பரணிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்ததில் வெடித்து சிதறியதில் வினோத் காயம் அடைந்தார். அதன் பிறகு மாங்காடு போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில்.

இருந்து வெளியே வந்தவர் கோயம்புத்தூரில் சென்று தலைமறைவானதாகவும் தற்போது தம்பியின் கொலைக்கு பழிவாங்குவதற்காக அஜித் தரப்பினரை கொலை செய்ய தீவிரம் காட்டி வந்த நிலையில் அதனை அறிந்து கொண்ட அஜித் தரப்பினர் முந்தி கொண்டு வினோத்தை கொலை செய்திருப்பது.

தெரியவந்தது ஏரியாவில் யார் பெரிய தாதாவாக வலம் வருவது என்ற போட்டியில் தற்போது நடந்த கொலை சம்பவத்தையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து  கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள அஜித் தரப்பினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வினோத் சிறையில் இருந்து வெளியே வந்தது போலீசாருக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பிறகு தான் சிறையில் இருந்து வெளியே வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் கவனிக்காமல் இருந்ததால் தற்போது இந்த கொலை சம்பவம் அரங்கேரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்