இலங்கை

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் – தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளை பிற்பகல் 02 மணி வரை நீடித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது.

கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையம் இன்றுவரை 18,321 விசாரணைகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சின் தகவல்படி, கைத்தொழில் அமைச்சின் உற்பத்தித் துறையின் கீழ் உள்ள 6,362 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 7,510 நுண் நிறுவனங்கள், 6,256 சிறிய அளவிலான நிறுவனங்கள், 3,998 நடுத்தர அளவிலான நிறுவனங்கள், மற்றும் 557 பெரிய அளவிலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு அறிவிக்கும் வகையில், 071-2666660 என்ற அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைத்தொழில் உரிமையாளர்கள் தொடர்புடைய தகவல்களை விரைவாக வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல்களை www.industry.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் உள்ளீடு செய்யலாம்.

மேலதிக உதவிகளைப் பிரதேச மற்றும் மாவட்டச் செயலக அலுவலகங்களில் கடமையில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளிடமும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!