பர்மிங்காம்–மான்செஸ்டர் புதிய ரயில் இணைப்பு
பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் (Birmingham and Manchester) இடையே புதிய ரயில் இணைப்பை அமைப்பதற்கான திட்டத்தை விரைவில்
அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முந்தைய HS2 அதிவேக ரயில் திட்டத்தில் இந்த பாதை சேர்க்கப்பட்டிருந்தும், ரிஷி சுனக்கின் அரசு அதை ரத்து செய்தது.
புதன்கிழமை, வடக்கு பவர்ஹவுஸ் ரயில் (NPR) திட்டத்தில் வடக்கு இங்கிலாந்தில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்புகள் உருவாக்கப்படுவதாக
அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு இங்கிலாந்தில் முக்கிய நகரங்களுக்கிடையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்புகளை உருவாக்கும் அரசின் இந்த திட்டம் வெறும் புதிய பாதையை மட்டுமே கொண்டிராமல், பர்மிங்காம் முதல் மான்செஸ்டர் வரையிலான பாதை பற்றிய சில விபரங்களையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
HS2 திட்டம் தற்போது பட்ஜெட்டையும் அட்டவணையையும் கடந்துவிட்டதால், பர்மிங்காம்–லண்டன் இடையிலான பாதைக்கு தற்போது £81 பில்லியன் செலவு ஏற்படும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் பல காரணிகளை சேர்த்தால், குறைந்தது £100 பில்லியன் செலவாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.





