இந்தியா செய்தி

பயணி உயிரிழந்ததால் பாகிஸ்தானில் அவசரமாக தரையிங்கிய இந்திய விமானம்

பாகிஸ்தானில் இந்திய விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயணி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக விமானம் பாகிஸ்தானில் திடீரென தரையிறங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

விமானத்தில் இருந்த பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து விமானத்தின் விமானிகள் கராச்சி விமான நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர், இந்த சிறப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கராச்சியில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர், கராச்சி விமான நிலைய மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட நைஜீரியரை பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.

எனினும் சில மணித்தியாலங்களின் பின்னர் இந்திய விமானம் தனது இலக்கான தோஹாவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அப்போது விமானத்தில் 163 பயணிகள் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!