நீதித்துறையின் மீதான தலையீட்டை சகித்துக்கொள்ள முடியாது – கௌசல்ய நவரட்ண!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் சுயாதீனமாக செயற்படும் என அதன் புதிய தலைவர் கௌசல்ய நவரட்ண தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் சுயாதீனமாக செயற்படும் அரசமைப்பை மதிக்கும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் மீதான எந்த தலையீட்டையும் சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமான அம்சம் என குறிப்பிட்டுள்ள அவர் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள படி இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் மனித உரிமைகளை பாதுகாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





