நாட்டின் அரச நிதி கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது

நாட்டின் அரச நிதி கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
சில பகுதியினருக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். நாட்டின் அரச நிதி கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது.
பல தசாப்தகால பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்ற முடியாது. அரச நிதி ஒழுங்குமுறையை கட்டாயம் சரிசெய்ய வேண்டும்.
வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரி அடிப்படையை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்போது ஒரு தற்காலிக பாதிப்பொன்றே ஏற்படுகின்றது. அரச வருமானம் அதிகரிக்கும் போது, படிப்படியாக பாதிப்புகள் மறைந்துவிடும்.
(Visited 14 times, 1 visits today)