திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை காலகண்டீஸ்வரர் திருக்கோவிலில்
குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமைன்று கணபதி ஹோமம் முதல் கால யாக பூஜையுடன் துவங்கி மூன்று நாட்கள் பல்வேறு வேள்விகள் நடைபெற்று.
இன்று காலை மங்கள வாத்தியம் முழங்க யாக சாலையில் இருந்த புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று விமானம் மற்றும் மூலவ சுவாமிக்கும் புதியதாக அமைக்கப்பட்ட கொடி மரத்திற்கும் நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லக்ஷ்மி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோருடன் ஊர் முக்கியஸ்தர்களுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.