டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை அல்லிராஜாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!
இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதை அரசாங்கம் பெருமையாக கொள்கிறது, அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.
கடன் பெற்றதை கொண்டாட வேண்டுமாயின் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இருந்து கொண்டாட வேண்டும்.
பொருளாதார மறுசீரமைப்பு என குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களின் பங்குகளை தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.நாட்டின் பொருளாதாரம்,தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்படும் என்றார்.