ஜெர்மனியில் திடீரென மாயமாகும் மக்கள் – வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனியில் திடீரென மாயமாகும் மக்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் புள்ளி விபரம் ஒன்றை ஜெர்மனியில் பொலிஸார் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியின் சமஷ்டி பொலிஸ் அமைப்பினால் இந்த புள்ளி விபர அறிக்கையை வெளியிட்டுள்து.
அதாவது ஜெர்மனியில் வருடம் ஒன்றுக்கு 10000க்கு மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மாயமாகியுள்ளார்களில் 70 சதவீதம் ஆண்கள் என்றும், இந்நிலையில் 1845 பேர் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் என்றும் தெரிவித்து இருக்கின்றது.
மேலும் 14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3488 பேர் கடந்த வருடம் மாயமாகியுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாயமானவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்களை விரைவில் பொலிஸ் அமைப்பு கண்டு பிடித்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர்களில் வருடத்திற்கு தொடர்ந்தும் 3 சதவீதத்தினர் காணாமல் போவதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 200 தொடக்கம் 300 வரை பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.