ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை புறக்கணிக்கும் பிரதிநிதிகள்!
இந்தியாவின் ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை தவிர்க்க பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக், ஜி20 கூட்டத்தில் ரஷ்ய பிரச்சாரத்தை எதிர்கொள்வுள்ளதாக கூறப்படுகிறது.
ஜி20 கூட்டத்தொடர் நாளை இந்தியாவின் புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. இதில் உக்ரைன் போர் குறித்து முக்கியமாக கரிசனை கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த சந்திப்பின் போது சீனா மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்பில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
இதனையடுத்து மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.
(Visited 5 times, 1 visits today)