ஜனாதிபதி மீது தனிப்பட்ட குரோதங்களை கொண்டுள்ள உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள்: இரா.சாணக்கியன்
ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டார்.
கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர்களை நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப்புலுpகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையில் பெண்னொருவர் உட்பட 11பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இன்று சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து சிறைச்சாலை ஆணையாளர் பிரபாகரனுடனும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டதாக தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
”மிகவும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர் ஒருவரும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தேன்.
கடந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு தினத்தன்று நானும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தபோது மயிலத்தடு பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம். அத்துடன் பயங்கரவா தடுப்பு சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.அந்த நேரத்தில் இது அரசாங்கத்தின் நிலப்பாடு அல்ல பொலிஸாரின் தவறான செயற்பாடுகள்போல் எங்களிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.” என்றார்.