சீனாவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய புதிய சட்டம்!
சீன சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகளையும் ஆடைகளையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான சட்டத்தின் நகல் வரைவு சீனாவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் நடப்புக்கு வந்தால் பிடிபடுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றர்.
விதிமீறல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. சீன தேசத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் ஆடைகளை அணிவோர் 15 நாள்கள் வரை சிறையிலடைக்கப்படலாம்.
அவர்களுக்கு 680 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம். தேசத்தின் உணர்வுகள் புண்படுவதை அதிகாரிகள் எப்படி நிர்ணயிக்க முடியும் என்று இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
எத்தகைய ஆடைகள் விதிமீறலாக எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை. அதிகாரிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிலர் குறைகூறினர்.