சர்வதேச நாணய நிதியக்குழு அடுத்த வாரம் நாட்டிற்கு
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
அந்த குழு 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் ஊடாக, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.




