கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருடிக்கடி !
																																		கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது.
இந்த மாத 31ம் திகதியுடன் சுகாதார காப்புறுதி செய்யாத பிரஜைகளுக்கான சுகாதார வசதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.எனினும் இந்த நடவடிக்கையானது வசதி குறைந்த மக்களுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தக் கூடும் என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கோவிட் வைரஸ் தொற்று பரவிய காலத்தில் சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களின் நலன் கருதி அனைவருக்கும் மருத்துவ நலன்களை வழங்க மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைக்கு கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது.
        



                        
                            
