கண்ணில் சிலந்தி கூடுகட்டுவதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது – கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்!
கண்புரை சத்திர சிகிச்சையின் போது தமது கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கண்களிற்கும் உயிருக்கும் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளிற்காக இழப்பீடுகளை கோரியுள்ளனர்.
பண்டாரவளையை சேர்ந்த 67 வயது பீ.ஏ.நந்தசேன என்பவர், நுவரேலியா மருத்துவமனையில் கண்புரைசத்திர கிசிச்சையின் போது பாதிக்கப்பட்டார்.
ஏப்பிரல் நான்காம் திகதி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஐந்தாம் திகதி சத்திரகிகிச்சை இடம்பெற்றது.
அன்றே குறிப்பிட்ட மருந்தினை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆறாம் திகதி நான் மருத்துவ மனையிலிருந்து வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
14 நாட்களின் பின்னரே நான் பாதிப்பை உணரத் தொடங்கினேன். சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட கண்ணின் மீது சிலந்தி கூடு கட்டியது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் மெல்ல மெல்ல கண்பார்வையை இழக்க தொடங்கினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.