விளையாட்டு

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்!

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமான ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக  ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் அடியை சந்தித்துள்ளது.

இதனையடுத்து,ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் 2023ல் இருந்து விலகியுள்ளார். இவர், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பந்து வீச்சில் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். மற்றும் 24 ரன்களையும் பதிவு செய்தார். எனவே, கண்டிப்பாக அவர் இல்லாமல் போட்டிகளில் விளையாடுவது ஹைதராபாத் அணிக்கு சிரமமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், நடப்பு சீசனில் வாஷிங்டன் சுந்தர் 7  போட்டிகளில் விளையாடினார். மொத்தமாக  3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  மறுபுறம், அவர் பேட்டிங்கில் 60 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 24 மற்றும் சராசரியாக 15 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!