உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடி உள்ளிட்ட தவிர்க்க முடியாத பல்வேறு காரணிகளால் காலம் தாழ்த்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு நேற்று மீண்டும் கூடிய நிலையில், இந்த தீர்மானத்தை அறிவித்தது.
(Visited 7 times, 1 visits today)