ஈக்குவாடோரில் பயங்கரம் – 12 பேர் சுட்டுக்கொலை

ஈக்குவடோரில் சேவல் சண்டை விளையாட்டு நடைபெறும் பகுதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்ததாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈக்குவடோரின் கிராமப் பகுதியொன்றிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் ஆயுதங்கள் மற்றும் போலியான இராணுவ சீருடைகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதப் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய தரப்பினரே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.
இலத்தீன் அமெரிக்காவில் போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்துள்ளமையினால் இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக ஈக்குவடோர் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)