ராசிபலன்

இன்றைய நாளில் வெற்றி உங்களுக்கு

மேஷம் -ராசி:

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.

பரணி : இலக்குகள் பிறக்கும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரிஷபம் ராசி:

வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். தொழில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனை சார்ந்த கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

ரோகிணி : ஈடுபாடு மேம்படும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம் -ராசி:

பெரியோர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையை உருவாக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள்  இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். புதுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

மிருகசீரிஷம் : நம்பிக்கை பிறக்கும்.

திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.

புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.

கடகம் -ராசி:

உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். தொழில் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். தகவல் தொடர்பு கருவிகளில் கவனம் வேண்டும். குழந்தைகள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

புனர்பூசம் : மேன்மையான நாள்.

பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : விரயங்கள் உண்டாகும்.

சிம்மம் -ராசி:

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதினை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : அறிமுகம் கிடைக்கும்.

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி -ராசி:

மற்றவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

உத்திரம் : முடிவு எடுப்பீர்கள்.

அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.

சித்திரை : விவேகம் வேண்டும்.

துலாம் -ராசி:

குழந்தைகளின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் நெருக்கடிகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். போட்டிகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

சித்திரை : நெருக்கடியான நாள்.

சுவாதி : கவலைகள் நீங்கும்.

விசாகம் : வெற்றிகரமான நாள்.

விருச்சிகம்- ராசி:

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு  மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : லாபகரமான நாள்.

கேட்டை : அனுபவம் கிடைக்கும்.

தனுசு -ராசி:

வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் ஆதரவு மேம்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.

பூராடம் : இழுபறிகள் மறையும்.

உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.

மகரம் -ராசி:

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். சத்தான உணவுகளை உண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சாதனைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.

அவிட்டம் : ஆதரவான நாள்.

கும்பம் -ராசி.

எளிதில் முடிய வேண்டிய பணிகள் கூட தடைபட்டு முடியும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். வியாபார பணிகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.

அவிட்டம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.

சதயம் : சாதகமற்ற நாள்.

பூரட்டாதி : மந்தத்தன்மை உண்டாகும்.

மீனம் -ராசி:

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஆதாயம் உண்டாகும். பங்கு வர்த்தகங்களில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உயர்வான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள்.

ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

hqxd1

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ராசிபலன்

இன்று உங்கள் ராசியின் அதிர்ஷ்டம்

மேஷம் -ராசி: முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது ஆலோசனைகளை பெறவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில்
ராசிபலன்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம்

மேஷம் -ராசி: கலை சார்ந்த பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான சூழ்நிலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும்

You cannot copy content of this page

Skip to content