இந்தியாவில் 3 பவுன் தங்க சங்கிலியை விழுங்கிய நாய்க் குட்டி
இந்தியாவில் மூன்று பவுன் தங்க சங்கிலியை குட்டி நாய் ஒன்று விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒளவாகட் அந்திமத் எனும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கேபி கிருஷ்ணதாஸ் என்பவரின் வீட்டில் அவரது மனைவியின் 3 பவுன் தங்கச் சங்கிலி தொலைந்துள்ளது.
இதனையடுத்து வீடு முழுவதும் அலசி ஆராய்ந்த அவர்கள் நகை கிடைக்காத விரக்தியில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணியான டெய்சி என்ற “கோல்டன் ரெட்ரீவர்” ரக குட்டி நாய்,பென்சில் ஒன்றை கடித்து கொண்டிடுப்பதை கவனித்தனர்.
ஒருவேளை தங்கச்சங்கிலியை இது விழுங்கியிருக்குமோ? என்ற சந்தேகத்தில் அதற்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் வயிற்றில் நகை இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அதை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நகையை வெளியே எடுத்துவிடலாம் என்று கூறினர்.
தனக்கு செல்லப்பிராணியின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு கிருஷ்ணதாஸ் மற்றும் அவரது மனைவி இதற்கு சம்மதம் தெரிவிக்கவே,அறுவை சிகிச்சைக்கான நாள் முதற்கொண்டு குறிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு எடுக்கப் பட்ட எக்ஸ்-ரே படத்தில் சங்கிலி கொஞ்சம் கொஞ்சமாக வெளியவருவதாகவும் மூன்று நாட்களில் இயற்கையாக அது வெளியே வந்து விடும் என்று மருத்துவர்கள் கூறினர். அது போல 3 நாட்கள் கழித்து தங்க சங்கிலி வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.