Site icon Tamil News

இத்தாலியில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

ஐரோப்பிய நாடுகளை சேராதவர்களுக்கான வேலை வாய்ப்பினை இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, இத்தாலியில் வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு 2023 மார்ச் 27 முதல் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகிவிட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரக் சாரதிகள், கட்டுமான தொழில், ஹோட்டல் தொழில், இயந்திரவியல் மற்றும் மின்சாரம், தொலைத்தொடர்பு, உணவுத் தொழில் உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், பங்களாதேஷ், கொரியா குடியரசு, எகிப்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தியா, கொசோவோ, நைஜீரியா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இலங்கை உட்பட ஐரோப்பிய நாடு அல்லாத பல நாடுகளில் 82,702 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மார்ச் 27, 2023 அன்று காலை 9:00 மணி முதல் https://www.anpal.gov.it/assumere-lavoratori-non-comunitari-anno-2023 என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தாலிய அரசாங்கத்தின் http://www.gazzettaufficiale.it/eli/id/2023/01/26/23A00232/sg பின்வரும் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் இது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த வேலைத்திட்டத்தின்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை இத்தாலியில் வேலை பெற எவருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

Exit mobile version