செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கும்பகோணத்திலிருந்து 36 பயணிகளுடன் அரசு சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடமலை புத்தூர் என்ற இடத்தில்  பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இதில் இருவருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அச்சரப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கு குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!