செய்தி தமிழ்நாடு

அரசின் பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை அரசு கருணாநிதி காலைக்கல்லூரியில் நடைபெறும் அனைத்து கல்லூரி மாணக்கர்களுக்கான பேச்சு போட்டியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்:அரசு பாதுகாப்பு இல்லங்களில் சரியான பாதுகாப்பு வசதிகளோடு தான் சிறுவர்கள் வைக்கப்படுகின்றனர்,சில நேரங்களில் அவர்கள் தப்பி போவது அங்கே உள்ளவர்களின் துணையோட வா அல்லது வெளி நபர்களின் உதவிகளோட வா அல்லது அவர்களின் சொந்த முயற்சிகளால் தப்பி செல்கின்றனரா என்பதை கண்டறிந்து தவறு செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து விடுவோம் அதில் எந்த தவறும் நடக்காது என்று கூறினார் .

மேலும் அவர் கூறுகையில்:ஆன்லைன் விவகாரத்தில் நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய சொல்லி உள்ள நிலையில் ஏற்கனவே பதில் மனு நீதிமன்றத்தில் உள்ளது என்றாலும் நீதிமன்றத்திற்கு உரிய பதில் மனுவை அரசு தாக்கல் செய்யும் என்றும் ரகுபதி கூறினார்.

(Visited 6 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி