அமெரிக்காவுடனான உறவு வருந்ததக்க நிலையில் உள்ளது – டிமிட்ரி பெஸ்கோவ்!
அமெரிக்காவுடனான உறவு வருந்ததக்க நிலையில் இருப்பதாக கிரெம்ளின் கூறியுள்ளது.
வொஷிங்டனின் உளவு ட்ரோன் ஒன்றை மொஸ்கோ நேற்று கருங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிரெம்ளின் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவுடனான உயர் மட்ட தொடர்பு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ரஷ்யா ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட மறுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)





