விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ மாணவிகள்
கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும்.
இது குறித்து மக்களிடையே உணர்த்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் ,இதனை முன்னிட்டு,கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சரவணம்பட்டி சோதனை சாவடி முன்பாக உள்ள பிரதான சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கண் அழுத்த நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.