வரலாறு காணாத பனிப்புயலால் சிக்கி தவிக்கும் அமெரிக்கா!
அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிழவி வருகின்றது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.
சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.மேலும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது.இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.எனவே, பலர் வைத்தியசாலைக்கு கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.
மேலும், இந்த பனிப்புயலில் 700க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் கடும் குளிருக்கு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.