மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு – உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆறு ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (14) நிராகரித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், இந்தியப் பிரதமர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது வெறுப்புப் பேச்சு மற்றும் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளை மனுதாரர் கோரியிருந்தார்.
ஆனால், மனுதாரரின் கோரிக்கைகளை முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)