மொஸ்கோவில் உள்ள பின்லாந்து தூதரகத்திற்கு இனங்காணப்படாத தூள் அடங்கிய கடிதம் கிடைத்துள்ளது
மொஸ்கோவில் உள்ள பின்லாந்தின் தூதரகத்திற்கு இனங்காணப்படாத தூள் அடங்கிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 4 அன்று பின்லாந்து முறையாக நேட்டோவில் இணைந்ததில் இருந்து மொஸ்கோவிற்கும் ஹெல்சிங்கிக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்து வருகின்றது.
அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியின் 31வது உறுப்பினராக பின்லாந்து மாறியுள்ளது. அதேபோல் பின்லாந்து ரஷ்யாவுடன் நீண்ட நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தூதரகத்திற்கு மூன்று கடிதங்கள் வந்தன, அதில் ஒரு கடிதத்தில் இனங்காணப்படாத தூள் இருந்தது என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)