போலந்து அதிபரை சந்திக்கும் செலன்ஸ்கி!
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி வரும் புதன் கிழமை போலந்துக்கு பயணமாகவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது போலந்து அதிபர் டுடாவை சந்திக்கும் அவர், பாதுகாப்பு நிலைமை, பொருளாதாரம், அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் போலந்தில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் பிரஜைகளையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலந்தும், உக்ரைனும் வரலாற்று ரீதியாக உறவு கொண்டுள்ளதுடன், போரின்போது 1 மில்லியன் உக்ரைன் மக்கள் போலந்திற்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)





