செய்தி

போர்நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

காசாவில் போர்நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதனால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில், ஹமாசின் தலைவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதுடன் பரந்த அளவில் மத்திய கிழக்கில் போர் விரிவடைவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டதன் காரணமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா, என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு பதிலளிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இந்த விடயம் குறித்து தாம் கலந்துரையாடியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேலின் முற்றுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தாக்குதல்கள் நீடிக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!