பெங்களூரு அணி படுந்தோல்வி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற அணி பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
முடிவில் பெங்களூரு அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.