April 11, 2025
Breaking News
Follow Us
செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டை என்றைக்கும் அதிமுக கோட்டை

சிவகங்கை மாவட்டத்தில் மறைந்த  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டைக்கு வருகை தந்தார் அவருக்கு   முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்  புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியா வயல் அருகே பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது

தாரை தப்பட்டை மயிலாட்டம் ஒயிலாட்டம் கட்ட கால் கரகாட்டம் ஆகியவற்றுடன் 2000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்ட

இதன் பின்னர் மேடை ஏறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது

இதன் பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புங்கோத்துக்களை வழங்கினார்கள்

அதனை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசுகையில் இரவு நேரம் ஆகியும் தங்களுடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கி என்னை வரவேற்பதற்காக வந்து உள்ளீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு புதுக்கோட்டை என்றைக்கும் அதிமுக கோட்டை என்பதை இன்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிரூபித்து விட்டீர்கள் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்

இதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையம் புறப்பட்டு சென்றார்

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி