புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்ட பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், தங்கள் எல்லையில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், பதட்டங்களைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களால் நியமிக்கப்பட்ட வெளியுறவு மந்திரி அமீர் கான் முட்டாகி ஆகியோர் இஸ்லாமாபாத்தில் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும்,பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அறிக்கையின்படி, பூட்டோ ஜர்தாரியும் முத்தாகியும் “அமைதி மற்றும் பாதுகாப்பு, அத்துடன் வர்த்தகம் மற்றும் இணைப்பு உள்ளிட்ட பரஸ்பர அக்கறையின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நேர்மையான மற்றும் ஆழமான பரிமாற்றத்தை நடத்தினர்”.