புட்டினை கைது செய்ய விதிக்கப்பட்ட உத்தரவு – இனி நடக்கப்போவது என்ன?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.
உக்ரேனைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பிள்ளைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்திய போர்க் குற்றத்திற்கு புட்டின் பொறுப்பு என்று நீதிமன்றம் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.
சட்டப்படிப் பார்த்தால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுகள் ரஷ்யாவிற்கு அர்த்தமற்றவை என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் 123 உறுப்பு நாடுகள் உள்ளன.
அவற்றில் எந்த நாட்டிற்கு புட்டின் சென்றாலும் அவரைத் தடுத்துவைத்து அனுப்பிவைக்க உறுப்பு நாடுகள் கடமைப்பட்டுள்ளன.
ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை உறுப்பு நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)