பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் செயல்

பிரான்ஸில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட 14 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ்-ஜெர்மனி எல்லைக் கிராமமான Rosenau (Haut-Rhin) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள rue du Soleil வீதியில் உள்ள வீடொன்றுக்குள் செவ்வாய்க்கிழமை காலை நுழைந்த 20 வரையான அதிரடிப்படையினர், குறித்த வீட்டினை சோதனையிட்டனர்.
இதன் போது 14 வயதுடைய சிறுவன் ஒருவனையும் கைது செய்தனர்.
குறித்த சிறுவன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் (IS) தொடர்பில் இருந்ததாக அறிய முடிகிறது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
குறித்த சிறுவன் 48 மணிநேரங்கள் வரை பொலிஸார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.
(Visited 10 times, 1 visits today)