பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்கள் மீது தாக்குதல் : வைரலாகும் காணொலி!
ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இந்து மாணவர்கள் சிலர் ஒன்றினைந்து பல்கலைக்கழத்தின் அனுமதியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான அழைப்பிதல்களை முகநூலில் வெளியிட்டு ஒருங்கிணைத்திருந்தனர்.
இதனையடுத்து மாணவர்களுக்கு ஐ.ஜே.டி ஆர்வலர்கள் மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே திட்டமிட்டப்படி கடந்த திங்கட்கிழமை மாணவர்கள் ஒன்றினைத்து பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஹோலி கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தில் இஸ்லாமிய ஜமியத் துல்பாவின் ஆர்வலர்களால் 15 இந்து மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் பாகிஸ்தான் வாழ் இந்துக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில வீடியோ காட்சிகளில் பாதுகாப்பு படையினர் மாணவர்களின் மீது தடியடி தாக்குதல் நடத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.
மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன்னனுமதி பெற்று கொண்டாடியதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த கூற்றை ஐ.ஜே.டியின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் ஷாஹித் மறுத்துள்ளார். அத்துடன் பாதுகாப்பு படையினர் நான்கு முதல் ஐந்து மாணவர்களை வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொலிஸில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் ஐ.ஜே.டிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஐஜேடியின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் ஷாஹித் தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.ஜே.டியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னுக்கு பின் முரணாக கூறப்படும் கருத்துக்களால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் பாகிஸ்தானில் இந்துக்களின் நிலையை இந்த காணொளிகள் எடுத்தியம்புவதாக சமூக ஆர்வளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Hindu students attacked in Pakistan for celebrating Holi 😡 ये है “भाई + चारा” पर ज्ञान पेलने वालों का असली चेहरा…😡 pic.twitter.com/ok46482LZp
— Jyot Jeet (@activistjyot) March 6, 2023