பக்முட் பகுதியில் 30 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி : பிரித்தானிய இராணுவ ஆலோசகர் வெளியிட்ட தகவல்!
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாக்முட் பகுதியில் சுமார் 30 ஆயிரம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் மூத்த ஆலோசகர் மதிப்பிட்டுள்ளார்.
OSCE க்கு பிரிட்டனின் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக செயற்பட்டு வரும் இயன் ஸ்டப்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது, கிழக்கு உப்புச் சுரங்க நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற ரஷ்யா போராடும் போது மிகவும் அதிக உயிரிழப்பு விகிதங்களைச் சந்தித்து வருவதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாக்முட்டைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் 20-30 ஆயிரம் வாக்னர் மற்றும் வழக்கமான ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என அவர் கணித்துள்ளார்.
இது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 800 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் வக்னர் கூலி படையனர் எனவும் கூறியுள்ளார்.